"ஹலோ ! எப்படிம்மா இருக்கே?
"சௌக்கியம் அண்ணா, நீங்க எப்படி இருக்கீங்க ?
"நானும் சௌக்கியம் , என்னம்மா பஜ்ஜி எல்லாம் முடிஞ்சதா?கொஞ்சம் பாக்கி இருக்கா? ? "
" ஐயோ ! 108 வது ஆள் நீ ! ஒண்ணும் ஸ்பெஷல் இல்ல !
நானும்தான் சாப்பிட்டேன் ! ஒண்ணும் ஆகலே ! ஆனா அவருக்கு மட்டும் என்ன ஆச்சுன்னு தெரியல !"
"ஹா! ஹா !லண்டன் , USA மகளிர் மன்றம் எல்லாம் போன் மேல போன் போட்டு அந்த பஜ்ஜி செய்யும் விதம் கேட்கரங்கலமா?, என் பொண்டாட்டி கூட காலைல இருந்து போன் பண்ணுங்கன்னு ஒரே தொல்லை ... ஆன தயவு செய்து receipe சொல்லதம்மா "
"என்னம்மா ? திரும்பவும் நலம் விசாரிக்க ஆரம்பிச்சிடங்களா ?"
"ஆமா!"
"ஒண்ணும் இல்லை ! வெறும் food poision ன்னு சொல்லுமா !"
"நீங்களே போதும் ! வேற எதையோ சாப்பிட்டு விட்டு , நான் பண்ண பஜ்ஜியலா தான் பிரச்சைன்னு சொல்லரிங்க!"
சனிக்கிழமை சாயங்காலம் , CD il எம்.எஸ் பாட்டு , வீடெங்கும் சாம்பிராணி புகை! அப்படியே கொஞ்சம் வாய்க்கு ருசியா பஜ்ஜி சாப்பிட்டா எப்படி இருக்கும் நினைச்சேன் ! அங்கேதான் வினையே ! என்ன பிரச்சைன்னு தெரியல ! அன்றைய தினம் இரவு வரை எல்லாம் சுகமே !
அடுத்த நாள் காலைல எழுந்திரிக்கும் போதே தலை சுத்தல் ஆரம்பிச்சது! கொஞ்ச நேரம் கழித்து எப்பவும் போல ஒரு லிட். தண்ணி (காவேரி தண்ணி தாங்க) குடிச்சேன் ! அங்கே மிஜிக் ஸ்டார்ட் ஆனதுதான்! என்ன உள்ளே போனாலும் , எந்த வடிவத்துல , அளவுல , கலருல போனாலும் ... உவ்வே தான் ... முதல் ரெண்டு தடவை வாந்தி எடுத்தப்போ , அடடே நாமமா பெற கின்னஸ் ரெகார்ட்ல போடலாம் ... "உலகத்தில் கர்ப்பம் ஆனா முதல் ஆண் ...." ... பரிசு தொகை ஐந்து லட்சம் ... ஒரு "i10" கார் ...
கார்-ல "இது ஒரு பொன் மலை பொழுது...,
வான மகள் ...
நாணுகிறாள்...
உவ்வே..உவ்வே "
கனவு develop ஆக..ஆகா.. உன்னோர் உவ்வே...
இந்த தடவை காபி... இப்படி போன அடுத்தது குடல் தான் வெளிய வரணும் ... அதனால அடிச்சி புடிச்சு டாக்டர் பார்க்க போனேன்..
What is the problem?
Feeling guddyness, and vomiting from morning...
What u had in yesterday night?
very normal food..
In the morning?
I had drunk lots of water..
oh... (checks my Bp, pulse...)
then ask me another question ...
What brand u had?
u mean?
What brand of drinks u had?
(அட பாவி...அட பாவி)
Doctor I told about drinking water ...nothing else...
oh..I thought.. (heeee..heee...)
(ஊசி போட்டார்...கையில் தான் )
Ok..have this tablets after food .. and take anything semisolid....
(அய்யா ! மகா பிரபுவே ! என் உடம்புக்கு வந்த கேடு என்னன்னு தெரிஞ்சிக்கலாமா? )
May I know whatz the problem?
Heee..heee..u might had something strange which ur body doesn't accept..so this problem...
ச்சே... நம்ம கனவுல இடி விழ... கின்னேஸ் ரெகார்ட் இல்லையா ! :( ஓகே !
மத்தியானம் கொஞ்சமா ரசம் கரைச்சி .. சுட உள்ள விட்டுகினு.. மாத்திரைய போட்டுக்கிட்டு படுத்தேன்... தெளிவான மாதிரி இருந்தது,,, ஆனா இல்ல ... எடுத்தேன் பாரு ஓட்டம் .... உவ்வே ... உவ்வே.. அட என்னடா இது பிரச்சனை ... சரி ஒண்ணும் உள்ள போட வேண்டாம் .. இப்படியே கொஞ்ச நேரம் கிடக்கலாம்ன்னு ... ஒரு தூக்கம் போட்டேன் ...
சாயாங்கலமா கண் முழிச்சு ... "நான் எங்கே இருக்கேன்? " அப்படி கேட்டேன் ...
"இங்கேதான்" - தங்கமணி...
"அழாத! யாரோ கண்ணு வைச்சிடாங்க போல இருக்கு "
"நான் அழலே ! கண்ணாடியை ஒழுங்க துடைச்சி போடுங்க!"
"ஓஒ... சாரி .."
"இது எத்தனை?"
"ரெண்டு..."
"இது?"
"மறுபடியும் இரண்டு"..."
இது?"
"க்ளுகோஸ்"
"சாப்டுங்க! இல்லேன்னா சுத்தமா energy போய்டும் "
"வேண்டாம்மா! உள்ளே போய் வெளியே வரதுக்கு , நேரா நீ wash basin -ல கொட்டிடலாம்.."அப்படி எல்லாம் சொல்லாதிங்க ! இதை குடிங்க !
"(களுக்...க்ளுக்க்..)(1.2...3...4...5....6..7...8......9.....10... உவ்வே ...உவ்வே...)
"நாந்தான் சொன்னேன்லமா !"
"சரி படுத்துகோங்க "
எப்போ தூங்கினேன்னு நினைவு இல்ல... எழுந்த பொழுது ... சூரியன் வெளிச்சம் ...கண் குசியது... எங்கேயோ "எங்கே செல்லும் இந்த பாதை " ..இளையராஜா உருகுகிறார்...ஒரே மனுஷங்க கூட்டம்...
"என்னங்க ... "
"டேய்...என்னடா ஆச்சு" -நண்பர்கள்...
கொஞ்ச தெளிவனதுக்கு appuram ...
அது சூரியன் உள்ள tube light ...
"எங்கே செல்லும் இந்த பாதை "--- "காக்க காக்க கனகவேல் காக்க"
"எழுந்து உட்காரு ! எப்படி இருக்க ? " -சகலை...
"இருக்கேன்.... "
"சாப்டிய ?"
"ஹ்ம்ம்"
"என்னம்மா சாப்டேன் சொல்றன்?"
"சாப்பிடருங்க .. ஆனா உடனே வெளியவும் எடுத்துடாருங்க ..."
"ஓஒ... கிளம்பு டாக்டர் கிட்டே போலாம்.."
"மறுபடியும் ஊசியா ?"
"இல்லை க்ளுகோஸ்!"
"அதான் காலைலே குடிச்சேனே "
"இப்போ குடிக்கறது இல்லை, ஏத்தறது !"
"!#%#%%&@#%"
பிறகு டாக்டர் (தண்ணி டாக்டர் இல்ல , வேற ஒருத்தர்) , க்ளுகோஸ் ட்ரிப்ஸ் ஏத்த ... கொஞ்ச கொஞ்சமா முகம் மலர்ச்சி அடைஞ்சது ...
டாக்டர்:" பாருங்க , வடிவேலு மாதிரி இருந்தாரு இப்போ விவேக் கலர்-ல மாறிட்டாரு..."
(அட பாவிகள ... இப்போ கூட ஒரு ஹீரோ கூட கம்பேர் பண்ண மாட்டிங்களா ?)
அடுத்த நாள் ... ஹார்லிக்க்ஸ் முதற்கொண்டு எல்லாம் சுகமே ! உள்ள போச்சு...nomore உவ்வே ....
"ஒரு நாள் நான் பதறி போய்ட்டேன்-க"
"அப்படி என்னம்மா பண்ணே நீ ?"
"அந்த பஜ்ஜி பண்ண எண்ணெய், மாவு எல்லாம் கொட்டிடேங்க ..."
"தப்பு பண்ணிடேம்மா , நல்ல யோசிச்சு பார்த்தா, நீயும் பஜ்ஜி சாப்பிட , பக்கத்து வீட்டு கரங்களும் அதே பஜ்ஜி சாப்பிட்டு இருகாங்க .. அதனாலே அந்த பஜ்ஜில எந்த பிரச்சினையும் இல்ல ... யுவர் ஹனர்... இதன் மூலம் எனது கட்சிகாரர் குற்றமற்றவர் ன்னு தெரியவருகிறது ..."
"ஹலோ ..."
"சாரி, பிரச்சனை பஜ்ஜி ல இல்ல, அதற்கு பிறகு நான் குடிச்ச Thumps-up "Taste the thunder" தான் பிரச்சனை.."
"என்னது ?"
"ஆமாம்மா .. போன வாரம் வாங்கின Taste the thunder தான் இப்போ test with doctor ஆக்கிடுச்சு ..."
"அப்போ.. நான் பண்ண பஜ்ஜி யில ஒரு பிரச்சனை யும் இல்லையா ?"
"இல்லைமா"
உடனே ஐந்து ஆறு STD Call பறந்தது... கூடவே இந்த வாரம் வங்கி வைத்த taste the thunder -um பறந்தது ....
This entry was posted
on Friday, March 7, 2008
at Friday, March 07, 2008
and is filed under
Adagonniya
. You can follow any responses to this entry through the
comments feed
.
கனவுகளின் வகை...
ஐயா யாருன்னா
- SeriousTimePass
- My logo is "keep smiling" and My slogan "live the life at this moment" ... very enthuastic , good dreamer, loaded with tons of creativity, loving simple beautiful things in everyday life ... ... simply telling an awesome friend you MUST have ...