தசாவதாரம் - என் பார்வையில் ...

Posted in

முதல் வரிசை ... படம் ஆரம்பித்து 10 நிமிடம் கழித்து என்ட்ரி ... வரிசை மாறி உட்கார்ந்தவர்களை எழுப்பும் படலம் எல்லாம் முடிந்து ... கமல்-ஐ பார்க்கும்போது அவர் அந்தரத்தில் தொங்கி கொண்டு இருக்கிறார் ...

பிறகு ஒரு 10 நிமிடத்திற்கு 12ஆம் நூற்றாண்டு களத்தில் தமிழகத்தில் நடக்கும் ஒரு சம்பவத்தை பற்றி கோவிந்து (கமல்-1) சொல்வதை படம் விரிகிறது...




சிவமே இறைவனை அடைய வழி என்று இருமாப்புடன் இருக்கும் சோழ மன்னன் தில்லை கோவிலில் இருந்து மூலவரை பெயர்த்து கடலில் வீசுமாறு கட்டளை இடுகிறான், இதை எதிர்த்து நம்பி(
கமல்2) , ராமானுஜரின் தீவிர பக்தன் கலகம் செய்ய , அவனையும் சேர்த்து கடலில் போட போவதாக மிரட்டும் மன்னன், நம்பி-குடும்பஸ்தன் ஆகையால் அவனுக்கு ஒரு மன்னிப்பை வழங்குகிறார் - "பஞ்சாட்சரம் சொன்னால் விடுதலை , இல்லையேல் மடி" , அதை மறுத்து , குடும்பத்தை துறந்து "ஓம் நமோ நாராயணய" என்று கதறி கடலில் மூலவரோடு மூழ்குகிறார்நம்பி . .

பயப்பட வேண்டாம்.. முழு கதையும் இப்படி வசனம் சகிதமா சொல்ல மாட்டேன்... இந்த முன்னுரையோட ஆரம்பிக்கர கதை, 21-அம் நூற்றாண்டுக்கு வருது (12-21 !!!) ... இந்த 21-ஆம் நூற்றாண்டு கதை என்ன , எதற்கு என்று என் கூட பார்த்த யாருக்கும் அவ்ளோவா புரில ... இதைத்தான் கமல் (இது திரைகதையசிரியர்), முதல் காட்சியிலே சொல்கிறார்...

கயாஸ் தியரி - அதாவது ஒரு காலத்தில் நடக்கும் செயலால் ஏற்படும் விளைவுகளும், அதுவே நடக்காமல் போனால் ஏற்படும் விளைவுகளும் , அதற்கான பிணைப்புகளுமே கயாஸ் தியரி .

ஜிம்புலா சொன்ன ( 12B ல சாம் பஸ் ஏறினா நடக்கும் விஷயமும் ஏறாம இருந்த நடக்கும் விஷயமும் ) ... இப்போ நான் ஹோசூர் ரோடு-ல வண்டி ஓட்டும் போது, சிக்னல்ல , யாராவது டைம் கேட்க, அந்த நேரம் பார்த்து என் வாட்ச் ஓடாம இருக்க, நான் என் மொபைல் போன் எடுத்து , அதை unlock பண்ணி டைம் சொல்ல , பதில் சொல்லறப்போ சிக்னல் விழா, அதனால் 2 செகண்ட் தாமதிக்க , அந்த கேப்ல என் பக்கதுல இருக்கற இன்னொரு வண்டிக்காரன் ஓவர்டகே அடிக்க, அப்போ எதிரிலே வேகமாக சிக்னலை கடக்கும் வயதான கிழவியை அவன் இடிக்க...அந்த பாட்டி மண்டைய போட ... இப்படி பிரச்சனை பெருசா போக...காரணம் ...

நான் என்னோட வாட்ச்-ல டைம் பார்க்காம மொபைல் எடுத்து unlock பண்ணாம , ஒரு செகண்ட் முன்ன போயிருந்தா நான் அந்த பாட்டி மேல மோதி இருக்கலாம், இல்ல என்கிட்டே டைம் கேட்காம இருந்துருந்தா , பாட்டி கிராஸ் பண்றதுக்கு முன்னாடி அந்த பையன் போய் இருந்து இருக்கலாம் ... So இதுதான் கயாஸ் தியரி ... இதுவும் "Butterfly Effect" டும் தான் படத்தின் அடி நாதம் ...


"Butterfly Effect" அப்படிங்கறது ... தற்காலத்தில் ஏற்படும் சிறு அசைவு , அல்லது சிறு மாற்றம் காலபோக்கில் மிகப்பெரிய விளைவுகளை கொடுக்ககூடியதாக இருக்கலாம் ... அதாவது ... பனி மலை மேலே இருந்து உருட்டப்படும் சிறு கல் காலபோக்கில் மிகப்பெரிய பனி புயலை கிளப்பலாம்..

அப்படித்தான் ... நம்பியோட உள்ளே போன அந்த மூலவர் சிலை பூமியின் அடிபரப்பில் ஏற்படுத்தும் சிறு உராய்வு...பிற்காலத்தில் இந்தோனேசியா வில் ஒரு ட்சுனாமி ஒருவாக முலவர் இருந்து இருக்கலாம் ...

இப்படியாக தசாவதாரம் கதை 12 அம் நூற்றாண்டுக்கு வருது...

பயோ-கெமிகல் கம்பெனி-இன் சீனியர் ஸயின்டிஸ்ட் கோவிந்த் , ஒரு உயிர்கொல்லி வைரஸ்-ஐ கண்டுபிடிக்கிறார், ஆனால் அது ஏற்படுத்தும் விளைவை எண்ணி வருந்துகிறார் ... பணத்தாசை பிடித்த கம்பெனி பாஸ் அதை தீவிரவாதிகளுக்கு விற்க நினைக்கும் போது, அந்த வைரஸ் இருக்கும் வயல் - ஐ (வரப்பு வயல் இல்லை, இது ஒரு பாக்ஸ்) பாஸ் இடம் இருந்து காப்பாற்றி ... தன்னுடன் வேலை செய்யும் நண்பரிடம் தஞ்சம் புகுகிறார்... அவரோ பாஸ் க்கு தகவல் அளிக்க .. .. கோவிந்த்-இடம் இருந்து வயல் -ஐ அபகரிக்க அமர்த்தப்படும் கொலையாளி கிறிஸ்டியன் பிலேட்சேர் (கமல்-3) & மல்லிகா (இது கமல் அல்ல, மல்லிகா ஸ்ராவத்) அவரை துரத்தோ துரத்து என்று துரத்துகிறார்..


இதற்கிடையில் கோவிந்த்க்கு உதவும் (ஏமாற்றும்) நண்பர், நண்பர் மனைவி(ஜப்பானிய) பிலேட்சேர்-அல் கொல்லப்படுகிறார்கள் ...இன்னொரு கமல் நண்பன் வயல்-ஐ மாற்றி இந்தியா-வுக்கு பார்சல் செய்ய, அமெரிக்காவில் இருந்து இந்தியா வுக்கு கதை திரும்ப,அமெரிக்கா அதிபர் புஷ் (கமல்-௪) இந்த பிரச்சனை தொடர்பாக திரு .மன்மோகன் கிட்ட பேச, பிலேட்சேர், CIA, RAW , உலா உளாய் எல்லாம் சேர்ந்து கமல் துரத்த ... உப்ப்ப்ப் .. கடைசியில் சுனாமி யால் முடிவுக்கு வருகிறது...

இங்கு பிலேட்சேர்க்கு உதவியாக வரும் மல்லிகா ஆற்றும் பணிகள் ஏராளம், தாராளம் :)


இதில் இடையில் வரும் பல்ராம் நிண்டு (கமல்-௫) கிச்சு கிச்சு மூட்டுகிறார்... கிருஷ்ணவேணி பாடி(கமல் -௬) கதையை சிறிது நகர்த்துகிறார்... அசின் அங்கிருந்து ஒட்டி 'கொள்' கிறார்... ஜபநேசே (கமல் -௭) கடைசில பிலேட்சேர் குட சண்டை போடவே துரதிகிட்டு வரர் ... (நேபாளி பரத் மாதிரி இருக்கு) ... நடுவுல அவதார் சிங்க்(கமல்-௮), பூவராகவன்(கமல்-௯) , கபிபிஉள்ள கான்(கமல்-௧0) எல்லாம் வந்துடு போறாங்க...

ஆனால் 10 கேரக்டர் படம், உலகத்தரம் அப்படின்னு யோசிக்கற அளவுக்கு கமலுக்கு சுதந்திரத்தையும்,பணத்தையும் தந்த தயாரிப்பாளருக்கு வாழ்த்துக்கள்... எவ்வளவொ குறைகள் இருந்தாலும் (அப்புறம் சொல்றேன் தனியா ) 3 மணி நேரம் ஒரு சாதரண ரசிகனை படம் ரொம்பவே திருப்தி படுத்தும்...பிலேட்சேரின் terminator துரத்தலும், செல்போன் ரிங்க்டோனை பாடலாக கருதி இசையை ரசிக்கும் பல்ராம் நாயுடுவும் , மனநிலை பிரள்ந்த பாட்டியும், மணல் கொள்ளையை தடுக்க , முயலும் நாகர்கோவில் பாஷையில் அசத்தும் பூவராகவனும் , வாழ்வே மாயம் ஸ்டைலில் ரத்தவாந்தி எடுக்கும் பாடகர் அவதார் சிங்கும் , கிளைமாக்ஸ் மோதலில்
"டூ யு ரிமெம்பர் ஹிரோஷிமா?" என்று கேட்கும் ஃப்லெட்சேர்க்கு
"டூ யு ரிமெம்பர் pearl ஹர்பௌர்?" என்று பதிலடி கொடுக்கும் ஜப்பானியரும், அப்பாவியாய் பேசும் கபிபுல்லா கானும் ,
உச்சகட்டமாக "Its a complex thing.. Let me explain it..." என்று கூறும் உதவியாளரிடம் "If it is complicated , then dont explain it !!! " என்று சொல்லிவிட்டு சிரிக்கும் புஷ் ... எஞ்சாய் பண்ணலாம்...


கதை,திரைக்கதை ,வசனம் - கமல் .... ரொம்பா யோசிச்சு Chaos Thoery உம் , Butter fly effect-யும் தமிழனுக்கு சொல்ல ஆசைப்பட்ட கமல் , இதை சுஜாதாவும் (அந்நியனில்) , ஜீவாவும் (12B) ஏற்கனேவே முயற்சித்து தோற்றது தெரிந்தும் இந்த ரிஸ்க் எடுத்து, அவருக்கு இதெல்லாம் ரஸ்க் சாப்பிடறதுன்னு சொல்லிட்டார் ...கம்முனு தலை ரவிக்குமார் கிட்டே வேலை குடுத்து இருந்தார்னா ... அப்படியே கிராமம், நாட்டமை, வில்லி , ன்னு நாம்மலு கரை கண்டு இருந்து இருப்பார்... ஹ்ம்ம் ... ஒண்ணும் மோசமா போகிடலை ...
"உங்களை போல ஒரு தெலுங்கன் வந்து தமிழை வாழ வைப்பான்"
"கடவுள் இல்லைன்னு நான் சொல்லலை , கடவுள் இருந்தார்னா நல்லா இருக்கும்னுதான் சொல்லறேன்" போன்ற கமல்தனமா வசனங்களும் , ஜோவ்ச்சல்யம் , மடம் பற்றிய வசனங்களும் கமல் கமல்தான் என்று சொல்லாமல் சொல்கின்றன ...



Direction - கே.எஸ்.ரவிக்குமார் ... "அன்பே சிவம்" சுந்தர் க ஞாபகத்திற்கு வரர்...

மீஜிக் - ஹிம்மேஷ் ... ஏற்கனவே இதை பத்தி சொல்லியாச்சு...

BGM - தேவிஸ்ரீ பிரசாத் ... தேவலை... கூரியர் ஆசாமியிடம் பல்ராம் , "தெலுகான்னு?" கேட்கும் போதும், Chasing காட்சிகளின் போதும் ...

ஒளிப்பதிவு - போங்கப்பா ... எதுக்குத்தான் இந்த அகேலா கேமரா கண்டு பிடிச்சாங்களோ .... எப்போ பாரு கேமராவை ஏத்தி எறக்கி தூக்கி ...உஸ்ஸ்ஸ்ஸ்... Chasing சீன்களில் இன்னும் விறுவிறுப்பு கூட்டி இருக்கலாம் ... 12 அம் நூற்றாண்டுக்கு இன்னும் நல்ல டோன் effect கொடுத்து இருக்கலாம்... (like Gladiator, King Arthur, Lord of the Rings...)


எடிட்டிங் ... வாசு - பூவராகவனிடம் அவருடைய சகாக்கள் குடித்துக்கொண்டு இருப்பதாய் காண்பித்து விட்டு , "இதுக்கேவா , இன்னும் இதை பார்!" அப்படிங்கறார், சீன் கட், திரும்பவும் வாசு-பூவராகவன் மீட்டிங்-ல அவர் என்ன காண்பிக்கறார் ன்னு சொல்லவே இல்ல,எடிட்டர் டீ குடிக்க போய்ட்டாரோ?

ஸ்டண்ட் - இன்னும் பழைய பாணியிலே எவ்ளோ நாள் கார், லாரிக்கு அடியிலே பைக் , பஸ் பிடிச்சிக்கிட்டு தள்ளுவண்டியிலே போறது , கரெக்ட்-எ அதுக்கு அப்புறம் கேட் விளறது ன்னு துரத்திக்கிட்டு இருப்பாங்களோ ... நீங்கல்லாம் ஒரு தடவை "Bourne Supermacy" chase பாருங்க .. அட்லீஸ்ட் "Transport" Chase-வது பாருங்க... ஆமா U.S -ல Left Hand drive-a? Right Hand Drive-a?


இதுவே கொஞ்சம் ஓவர போய்ட்டதால.... அடுத்த பதிவுல நிறை குறைகள் பத்தி நிறைய பேசலாம்....



This entry was posted on Tuesday, June 17, 2008 at Tuesday, June 17, 2008 and is filed under . You can follow any responses to this entry through the comments feed .

4 பேர் ரசிச்சி, திட்டி இருக்காங்க ...

வாவ்! முதல்ல இந்த நியூ template kku blog readers எல்லாரும் ஜோரா ஒரு கை தட்டுங்க!congradz to the incognito designer in Ramc:)...

cmng to movie - though not very obsessively organized characters, but for a winnowing kamal's man its a good treat:) ...
it wud be of gud international std, if the way of making had better unravelled the unexpected ways of exploring the serendipitous and chaotic nature...

anyways, its worth watching:)

6:06 PM
Anonymous  

dei dei dei..... yennada ippadi oru kandupidippu...

"நம்பியோட உள்ளே போன அந்த மூலவர் சிலை பூமியின் அடிபரப்பில் ஏற்படுத்தும் சிறு உராய்வு...பிற்காலத்தில் இந்தோனேசியா வில் ஒரு ட்சுனாமி ஒருவாக முலவர் இருந்து இருக்கலாம்"
idhu Asin kooda solla nenaikadha onnu...(in the movie)

Yaro oruthan review ezhudi irundhan...was comparing ten roles with 10 vishnu avatharam... Kamal vitta matter romba per yosikka arambichuttanga naattule!! This is called Kamal effect!

Andha raajanukkelam raajan Rangarajan(Sujatha) irundhirundha, indha Vishnu dhasan(Kamal hassan) ivlo kastapattu irukka vendiyadhu illangradhu ennoda point.

Free vidu... Enakku enna thonudhunna...

Kamal has inclined to the side of business, cos of the huge production expense.
He has to release the movie in Tamil, Telegu and Hindi.
Audience are different and their expectation are also.
On top of everything there shuold be 10 different roles to be played!
Kamal hassan has concentrated only on the make-up and not much on the script.

KS Ravikumar will be gud for tamil cinema. If he tries to match with bollywood taste then Tamils will not accept it.
That's what happened here!
Aga motham they will getback the money but not the audience!

If kamal has not inclined then Aascar Ravichandran will comment like Dhanu(Aalavandhan---ennai azhikka vandhaan) ;-)



-Shankar
Shankar.manickam@gmail.com

6:33 PM

Nalla template and neat review !
Romba nalaikku apparam ozhunga ezhutha arambichu irukka :)
so continue this !

12:26 PM

@sheinvents,
Thanks
@Shankar,
Machi , ippadithan Hey ram padam vanthappo illathathu pollathathu ellam sonnanga, I remember hostel days , ECE-MECH gang was sitting and discussing for full night abt that movie :)
@Sami,
Thanks da..

6:49 PM

Post a Comment